Translate

Friday 1 May 2015

தமிழ் பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்.

1)பணம் பந்தியிலே  குணம் குப்பையிலே.

பணம் பந்தியிலே
பணம் பந்தியிலே வைத்தாலும் உண்ண முடியாது.
குணம் குப்பையிலே
குப்பையில் கற்கள், கழிவுகள் இருக்கும். அக் கற்களோடு சேர்ந்து வைரக் கல்லொன்று குப்பையில் இருந்தாலும் அது வைரம் என்றால் அதன் மரியாதை தனி மரியாதை.





2)பணம் பாதாளம்  வரை பாயும்.

பணம் பணம் என்று பணத்தாசை கொண்டு அலைந்தால் இறுதியில் பாதாளம் தான் கதி.






3)பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்.
பணத்தைப் பார்த்து ஆசை கொள்வோர் உயிர் உள்ள பிணங்களே. உடலுக்கு உயிர் உள்ள வரைதான் மரியாதை. உயிர் உள்ளவரை மரியாதைக்குரிய திரு குமாரன். உயிர் பிரிந்தால் அகிர்தினை (அந்தப் பிணம் )
ஆகவே உயர் திணைக்குரிய மரியாதை பெற வேண்டும் என்றால் பணத்தாசையை கைவிட வேண்டும்.

4)ஆயிரம் பொய் சொல்லியேனும் ஒரு திருமணம் செய்.
ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு திருமணம் செய்.

திருமணம் என்பது ஒரு கலாச்சார விடையம் பிறர் அறியாமல் ஒரு திருமணம் செய்தால் நாளை மணமகனுக்கும் மணமகளுக்கும் தவறான அடையாளம் வந்துவிடும்.
அதனால் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வைப் பகிர்வது அனைவருக்கும் அறிவிக்கவேண்டும். அதனாலேயே குறைந்தது ஆயிரம் பேருக்காவது போய்ச் சொல்லி திருமணம் செய்க என்று சொல்லப் படுகின்றது.



5)தங்கக் கிண்ணத்தில் தண்ணீர் ஊரினும் துளசில் மாங்காய் காய்க்காது.

என்னதான் அதிகமாக கவனித்தாலும் பாடு பட்டாலும் சில விடையங்கள் கைகூடுவதில்லை அப்படிப் பட்ட செயல்ப் பாட்டிற்கு இப்படிச் சொல்வார்கள்