Translate

Friday 1 May 2015

தமிழ் பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்.

1)பணம் பந்தியிலே  குணம் குப்பையிலே.

பணம் பந்தியிலே
பணம் பந்தியிலே வைத்தாலும் உண்ண முடியாது.
குணம் குப்பையிலே
குப்பையில் கற்கள், கழிவுகள் இருக்கும். அக் கற்களோடு சேர்ந்து வைரக் கல்லொன்று குப்பையில் இருந்தாலும் அது வைரம் என்றால் அதன் மரியாதை தனி மரியாதை.





2)பணம் பாதாளம்  வரை பாயும்.

பணம் பணம் என்று பணத்தாசை கொண்டு அலைந்தால் இறுதியில் பாதாளம் தான் கதி.






3)பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்.
பணத்தைப் பார்த்து ஆசை கொள்வோர் உயிர் உள்ள பிணங்களே. உடலுக்கு உயிர் உள்ள வரைதான் மரியாதை. உயிர் உள்ளவரை மரியாதைக்குரிய திரு குமாரன். உயிர் பிரிந்தால் அகிர்தினை (அந்தப் பிணம் )
ஆகவே உயர் திணைக்குரிய மரியாதை பெற வேண்டும் என்றால் பணத்தாசையை கைவிட வேண்டும்.

4)ஆயிரம் பொய் சொல்லியேனும் ஒரு திருமணம் செய்.
ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு திருமணம் செய்.

திருமணம் என்பது ஒரு கலாச்சார விடையம் பிறர் அறியாமல் ஒரு திருமணம் செய்தால் நாளை மணமகனுக்கும் மணமகளுக்கும் தவறான அடையாளம் வந்துவிடும்.
அதனால் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வைப் பகிர்வது அனைவருக்கும் அறிவிக்கவேண்டும். அதனாலேயே குறைந்தது ஆயிரம் பேருக்காவது போய்ச் சொல்லி திருமணம் செய்க என்று சொல்லப் படுகின்றது.



5)தங்கக் கிண்ணத்தில் தண்ணீர் ஊரினும் துளசில் மாங்காய் காய்க்காது.

என்னதான் அதிகமாக கவனித்தாலும் பாடு பட்டாலும் சில விடையங்கள் கைகூடுவதில்லை அப்படிப் பட்ட செயல்ப் பாட்டிற்கு இப்படிச் சொல்வார்கள்

Thursday 30 April 2015

காமமா? காதலா?

தேன்.... காதல்....
தேனில் ஊறிய பேரிச்சை, காமம்.




மான்விழி கொண்டு இந்த
ஆண் உயிர் கொய்யும்
காரியம் செய்யும் பெண்ணே- இது
காமமா? காதலா?

வானவில்லின் வண்ணம் போன்று
காணுகின்றேன் உன்னை இங்கு.
காணவில்லை என்னை இன்று
தேடுகின்றேன் உன் முன் நின்று.

தாடி உந்தன் அன்பை என்று,
தாடி ஓடு வந்தே நின்று,
தேடி உன்னைப் பார்த்தேன் - என்
தேவதையைப் பார்த்தேன்.

கேள்வியதைக் கேட்டேன்
கோவப் பார்வையினைக் காட்டி- இத்தனை
தாமதம் ஏன் எனத் திட்டிச் சென்றாள்.

Wednesday 29 April 2015

பசுவாய் நான் பாம்பாய் நீ...

பால் தரும் பசுவாக நான் இருந்தேனே.
பாலூற்றி  பாம்புன்னை நான் வளர்த்தேனே.




தோகை விரித்தாடும் மயில் நீயென நானும் நினைத்தேனே - நாகம் நீயென்
தேகம் கருகும் வண்ணம் நஞ்சை உமிழ்ந்தாயே.

உன்னை நேசித்த என்னை ஜோசித்து
பிணைதானின்றி பிணமாகின்றேன்.

என் மனம் கலங்க நீ மணம்புரிந்தாய்
பெண்மனம் இதுவோ நான் இன்றறிந்தேன்.

புகைத்தால் நுரையீரல் கெடும்.
குடித்தால் கல்லீரல் கெடும். - உன்னை
நினைத்தால் என் வாழ்வே கெடும்.

நீயில்லா வாழ்க்கையை
என்றும் நான்  எண்ணியதே இல்லை.
நானில்ல வாழ்க்கையை
இன்று தினம்தினம் நீ எண்ணுகின்றாய்.

மனம் உனக்கு
மடி எவர்க்கோ
என்று வாழ
என்னால் இயலா.

பெண்ணே...
என்னை ஏமாற்றி
உன்னை நீ உயர்த்தி
இன்று நீவாழும் உன்வாழ்க்கை
நாளை கசக்கும்.
உன்னை நான் எண்ணி
மண்ணுள் உறங்கையிலும்,
பெண்ணே என் வாழ்க்கை என்றும்
ஒளி வீசும்.

Sunday 26 April 2015

காதல்க் கவிதை.

சோகத்தில் ஒரு காதல்(ல்/லில்) ஒரு சோகம்

Tuesday 21 April 2015

விடுகதை இலக்கம் 2

ஏழை எடுத்து எறியும் ஒன்றை, பணக்காறன் பக்குவமாக எடுத்துப் pocketஇல் வைத்துச் செல்வான் அது என்ன?


ஏழைக்குத் தடிமல் வந்தால் மூக்குச் சீறி எறிவான்.
பணக்காரனுக்குத் தடிமல் வந்தால் கைக்குட்டையில் மடிச்சு பாக்கெட்டில் வைப்பன்.



மூக்குச்சளி 

Sunday 19 April 2015

உறங்கினேன் உன்மடியில், அதுவே உறக்கம்.

காலதனுள் தலை கோதி
உலோகத்தையே தான் மறந்து
கூஒர்... கூஒர்... கோர்... கோர்...
உறங்குகின்ற பூனை போன்று .









  
பூத்தேன் நான் என பூப் பூக்க.
பூதேனா?! என்று வண்டு வர.
தேனருத்திய போதையிலே வண்டு
பூவிதலில் உறங்கினால்ப் போல்.



உடல் நொந்த விவசாயி
ஒருவேளை உணவுண்டு
தனை மறந்துறங்கினார்ப் போல்.



திரை கடல் கடந்து இருவருடம்
ஊருறவு காணாது உழைத்து பின்
மனை திரும்பி
மனைவி மக்கள் முகம் பார்த்து
உறங்கினேனே உன்மடியில் தாய்மண்ணே
அதுவே உறக்கம்.

Saturday 18 April 2015

சோகத்தில் ஒரு காதல்(ல்/லில்) ஒரு சோகம்

காதல், கரப்பான்பூச்சி கன்னத்தில் ஊர்வதைப் போல்.
காதல், நன்னீர்க் குடத்துள் தவளை பாய்ந்தார்ப்போல்.
காதல், தேன் குழவி மான் காதுள்ப் புகுந்தார்ப் போல்.


காதல், வானில் நீர் அதுவும் கானல் நீர்.
அதைப் பருகத்த் தவிக்கும் - நான்
தாகம் கொண்ட காகம் போன்று,
தள்ளாடித் தள்ளாடிப் பறக்கின்றேன்.

சோகம் கொண்ட என்னை -அவள்
பாவமென்று பாராது,
தீண்டப்படா மாந்தர் போன்று
தாண்டிச்சென்றாலே.

Wednesday 15 April 2015

விடுகதை இலக்கம் 1

ஒரு அப்பில்த்(Apple) தோட்டம், அதில் மூன்று காவலர்கள் காவல் காக்கின்றார்கள்.

அந்த அப்பில்த் தோட்டத்தில் இருந்து உங்களுக்கு ஒரு அப்பில் தேவை. ஆனால் அந்தத் தோட்டத்தில் ஒரு விதிமுறை உள்ளது. அங்கு அப்பில் பிடுங்குவதற்கு காசு கொடுக்கத்தேவை இல்லை. அதற்குப் பதில் ஆய்ந்து வைத்துள்ள அப்பிலின் எண்ணிக்கையில்ப் பாதியும் ஒரு சரிபாதி அப்பிலும் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக

20 அப்பில் பிடுங்கி வைத்துள்ளீர்கள் என்றால் அத்தொகையின் பாதி 10 அப்பிலும் ஒரு  அரைவாசி அப்பிலும் கொடுக்க வேண்டும்.


ஆனால் ஒரு முக்கிய கட்டளை அப்பிலை வெட்டக் கூடாது.

உள்ளே சென்று எத்தனை அப்பில் ஆய்ந்தால் ஒவ்வொரு காவலருக்கும் பாதிதொகை அப்பிலும் ஒரு பாதி அப்பிலும் கொடுத்து வெளியில்வரும்  போது உங்கள் கையில் ஒரு அப்பிலும் மிஞ்சும் ?

Monday 6 April 2015

ஆண்பிள்ளை வேணுமா? பெண்பிள்ளையா வேணுமா?

ஆண்பிள்ளை வேணுமா? பெண்பிள்ளையா வேணுமா?

Love Kavi

ஒரு நொடியில் என்மனதை உருக்கி
மறு நொடியே உறைய வைத்த கிறுக்கி,
உருக்கை உருக்கி
அரிக்க அருவாள் செய்வோர் போல.

கடுக்கன் போட்ட கன்னி- உன்
கடைக்கண் பார்த்துத்
தடக்கி விழுந்தேன்
இடைக்கு இடை  sorry
எடைக்கு எடை தங்கம் போட்டு- உன்னை
என் மனை ஆக்க எண்ணம்

தடைக்குத் தடை வரினும் அதை
தகர்த்து எறிவேன் திண்ணம்.

விழியால்ப் பேசும் பெண்ணே -உன்
திருவாய் மலர்ந்து ஒருவார்த்தை சொல்
மறு நொடியே திருமண விருந்து.