Translate

Friday 15 April 2016

கால இயந்திரம்

கால இயந்திரம் 

கால இயந்திரம்  இப்போது பின்னோக்கி நகர்கின்றது, இப்போது 1840 ஆம் ஆண்டிற்குச் செல்வோம். 1990 இல் வாழ்ந்த குழந்தைகளுக்கும், அந்த கால கட்டத்தில் Discovery பார்த்த குழந்தைகளுக்கும் இந்த வார்த்தைப் பிரயோகங்கள் நன்றாகவே பிரசித்தமானவை.



கால இயந்திரம் என்றால் என்ன என்றே புரியாத பலர் இன்றும் உள்ளனர். கால இயந்திரம் என்றால் Time Machine. கற்பனையில் மட்டும் உலாவிக் கொண்டிருந்த இந்த கால இயந்திரம்(Time Machine), கற்பனையின் நிழலாகிய திரைப்படங்களிலும் உலாவத் தொடங்கியது. வெளிநாட்டுப் படங்களில் மட்டும் உலாவிக் கொண்டிருந்த இந்த கால இயந்திரம் (Time Machine), இன்று பல தமிழ் படங்களில் இறங்கி தமிழர்கள் சிந்தனையிலும் குதித்துள்ளது. இதன் விம்பமாக தென் இந்திய தமிழ் நடிகர் சூரியாவின் புதிய படமாகிய 24 என்ற படத்தின் மூலம் பெரிதாகப் பேசப்படுகின்றது இந்தக் கால இயந்திரம் (Time Machine).



கால இயந்திரம்(Time Machine) என்றால் என்ன? இதுவும் ஒரு வகை எதிர்வு கூறல் தான். ஆனால் எதிர்வு கூறலின் அடுத்த நிலை. எதிர்வு கூறல் என்றால் என்ன எதிர் காலத்தில் நடப்பதை எண்ண அலைகளின் ஆற்றலால் முன் கூட்டியே ஊகித்துச் சொல்லுதல். கால இயந்தரம் என்றால் அந்த எதிர் காலத்திற்கே சென்று அங்கு நடப்பதைக் கண்காணித்தல்.

கணித மேதை ஐன்ஸ்டின் கூறுகையில் ஒளியை விட வேகமாகப் பயணித்தால் ஒரு வேளையில் எதிர் காலத்திற்கே பயணிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை எண்ணக் கருவாகக் கொண்ட எமது கலைப் படைப்பாளர்கள் இந்த கால இயந்திரம் என்ற கட்டுக் கதையை ஆரம்பித்தனர். விஞ்ஞானம் என்பது அனைத்துமே நிகழ்ந்து முடியும் வரை கட்டுக் கதை தான் எப்போது அதை பயிற்சித்து  முடிவு கிடைக்கின்றதோ அன்று தான் அங்கீகரிக்கப்படும். அந்த வகையில்ப் பார்த்தால் கால இயந்திரமும் ஒருவகை கட்டுக் கதை தான். இந்த கால இயந்திரம் என்ற கதையில் சுவாரஸ்யமான விடையம் என்ன என்று பார்த்தால், இதைக் கொண்டு எதிர் காலம் மட்டும் அல்ல இறந்த காலத்திற்கும் பயணிக்கலாம். அவ்வாறு பயணித்து நாம் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.

நிகழவே முடியாது என்ற பல கற்பனைகள் தான் எதிர்கால தொழில் நுட்பத்திற்கு  தீனியாக அமைகின்றது. ஆகவே விஞ்ஞானத்தை ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கற்பனைக் கதைகள் எல்லாம் புதிய சிந்தனைகளைக் கொடுக்கும். நீங்களும் ஒரு விஞ்ஞானி ஆக ஆசையா? இதோ உங்களுக்கான பாதை இது தான். இந்த கால இயந்திரம் பற்றிய ஒரு சில நுணுக்கமான சிந்தனைகளைப் பகிரவுள்ளேன்.

என் சிற்றறிவிற்கு எட்டியபடி இறந்தகாலத்தை மாற்ற முடியுமா என்றால் அதற்கான ஆற்றல் இதுவரை தோன்றவில்லை என்பேன். ஆனால் எதிர்காலத்திற்குப் பயணிக்காலாமா?! என்றால் 100 விழுக்காடு முழுமையாக எதிர்காலத்திற்குள் செல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு 59 விழுக்காடு எதிர்காலத்திற்குள் செல்வதற்க்குச் சாத்தியம் உண்டு அதுமட்டும் அன்றி அந்த எதிர் காலத்தை மாற்றிக் கூட அமைக்கலாம். இன்றைய தினத்தில் விண்வெளியில் இருந்து விண்கலங்கள் மூலம் பூமியை கண்காணித்துக் கொண்டுள்ளனர் மனிதர்கள். அதுமட்டும் அன்றி இருந்த இடத்தில் இருந்தே பல்லாயிரம் km தூரத்தில் உள்ள நாடுகளின் வீதியில் இறங்கி நடந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வண்ணம் Street View என்று பல தொழில் நுட்பம் வந்து விட்டன.


உதாரணமாக கடந்தமாதம் இலங்கையும் அந்த வரிசையில் வந்துள்ளது, இப்போது இலங்கையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால் இலங்கைக்குச் சென்று தான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை Google Mapஇல் போனால் Street View என்ற வாய்ப்பின் மூலம் தெருவில் இறங்கிப் பார்ப்பது போன்று அழகான இலங்கையைப் பார்க்க முடியும். ஆனால் அந்த படங்கள் எல்லாம் ஏதோ ஒரு நாளில் எடுக்கப்பட்ட புகைப் படங்களே ஆகும். அந்தப் புகைப்படங்களிற்குப் பதிலாக நேரடியாகப் பார்க்கக் கூடிய Video வசதி வந்தால் அந்த வசதியைப் பயன் படுத்தி கணணி மூலம் ஒரு Program எழுத வேண்டும். எமது வாழ்வில் நமக்கு நடக்கும் நன்மை தீமை அனைத்திற்கும் காலமே காரணம் என்று எம் முன்னோர்கள் கூறியது நீங்கள் அறிந்ததே.

அந்தக் காலத்தைக் கணிக்கும் வண்ணம் Program எழுத வேண்டும். அதற்கு உதவியாக நேரடியாகப் பூமியைக் கண்காணித்து Video வடிவில் வரும் அந்த Videoக்களைப் பயன்படுத்தி கணனியின் Program மூலம் நாம் அடுத்த கணத்தில் செய்ய உள்ள காரியத்தைச் செய்தால் அதற்கான பிரதி பலிப்பு எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியும். நாம் செய்யும் காரியத்தை எந்தக் கணத்தில் ஆரம்பித்தால் அதற்கான அதிர்ஷ்டம்  அதிகமாக இருக்கும், கால நேரம் இசைந்து வரும் என்பதைக் கணிக்க முடியும். இருப்பினும் இவை அனைத்தும் 100 விழுக்காடு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால், வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில் கூட பூமியில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கூறுவார்கள் சீனர்கள். அதனால் நுணுக்கமாக எதிர்காலத்தைக் கணிப்பது மிகவும் கடினம். ஆனால் 59 விழுக்காடு கணித்துவிடலாம் என்பது ஒரு வெற்றிச் செய்தியே ஆகும்.




அதி புத்திசாலி விஞ்ஞானி கூட இதுவரை அதிகமாக தன் மூளையின் ஆற்றலில் 19 விழுக்காட்டையே பயன் படுத்தி உள்ளான். ஆகவே மிகுதியையும் பயன் படுத்தும் வண்ணம் நாம் சிந்திக்கத் தொடங்கினால் கண்டிப்பாக எதிர்காலத்தில் எதிர்காலத்தை கண்காணிக்கும் கருவியைக் கண்டு பிடிக்க கண்டிப்பாக வாய்ப்புக்கள் உண்டு.

அறிவாளியாப் பிறப்பவர் யாரும் இல்லை
பிறந்ததும் அறிவாளி ஆவதும் இல்லை
அறிவாளியாக வளராதுவிடின்
அடிமுட்டாளாக இறந்துவிடுவோம்.

ஆக்கம் DJ வினோ Borken