Translate

Wednesday 22 May 2019

வெய்யில் காலத்தில் உடல்நலம் காப்போம்.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, வெயில் உச்சத்திற்குச் செல்லப் போகின்றது, செல்ஸியஸ் டிகிரிக்கு கணக்கில் உயர போகின்றது, காற்று கூட வீச மறுக்கும், சிலவேளைகளில் அனல்க் காற்று வீசலாம்.

மக்கள் இவற்றில் இருந்து தப்புவதற்காக குளிர் நிலங்களை நாடி ஓட ஆரம்பிக்கின்றனர். சம்மர் லீவு எடுத்த மக்கள் தம்மை ஆசுவாசப் படுத்துவதற்காக இடம் விட்டு இடம் நாடு விட்டு நாடாகச் சென்று வருகிறானர்.

பகல் நேரப் பயணங்கள் மனிதனை பரிதவிக்க வைக்க போகின்றன, இந்நிலையில் ஐஸ் வாட்டர் மீது விருப்பம் தூண்டப படுவது இயல்புதான். பிரிச்சில் வைத்த குளிர்நீரை எடுத்து மடக்கு மடக்கு என்று குடிக்கத் தோன்றும்.

ஆனால் அது சரியான செயல்தானா? மருத்துவர்கள் என்ன கூறுகின்றார்கள்? வெயிலில் களைத்து வீடுவாரும் மனிதன் உடனடியாக குளிர் நீரைக் குடித்தால், திடீர் வெப்பநிலை மாற்றத்தால் உடலில் உள்ள சிறு ரத்தக் குழாய்கள் வெடித்துவிடுமாம். குளிர்நீரை குடிப்பது மட்டுமல்ல, குளிநீரில் குதி காலை நனைத்தாலக் கூட பாதிப்பு ஏற்படத் தான் செய்யும்.

வெளியில் வெயில் உச்சத்தில் இருக்கும்போது வெயில் பட்ட உடலும் சூழல் வெப்பநிலையோடு சேர்ந்து உஷ்ணமாகிவிடும். அவ்வாறு உஷ்ணநிலையில் இருக்கும் உடலின் வெளிப்புறமோ உட்புறமோ உடனடியா குளிர்வடையாக் கூடாது. காரணம் அவ்வாறு உடல் விரையாகக் குளிர்வடையும் நேரத்தில் வெளிப்புற சூழ்நிலை இப்போது வெப்பமாகவே இருக்கும், அதன் காரணத்தால் உடல் மீண்டும் தன்னை குளிர்வாக வைத்திருக்க முயலும், ஆனால் குளிர் நீரால் ஏற்கனவே குளிர்ந்துள்ள உடலை மீண்டும் குளிர்வடைய வைக்க முயலும் உடல் தொடர்ச்சியாக தோல்வியுறுவதால், விரைவாகச் சோர்வடையும். வேண்டும் என்றால் குளிர் நீர் குடித்தவுடன் பாருங்கள் உங்களை அறியாமல் ஒரு சோர்வு ஏற்படும். இது ஆரோக்கியம் அற்ற இரத்த நாளங்களை உருவாக்கி உடலை பலவீனமாகும். ஒரு கடத்தில் ரத்த நாளங்களை வெடிக்கவும் வைக்கும் அது நடந்தால் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படலாம்.

எப்படி இந்தத் தருணத்தை சமாளிப்பது என்றால், முதலில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து உடலை அமைதி படுத்த வேண்டும் இது உடலின் வெப்பநிலையை நேர்த்தியாகக் குறைக்கும். அதன் பின் உடல் அறைவெப்பநிலை அடையும் நேரத்தில் சாதாரண குடிநீரை குடிப்பதே சாலச் சிறந்த தீர்வாகும்.

ஆதலால் குளிர் தண்ணீரைத் தடுப்போம்,
குடிதண்ணீரைக் குடிப்போம்,
உடல்நலத்தைக் காப்போம்.

எழுத்து
மங்கை அரசி.

No comments:

Post a Comment