Translate

Thursday 30 May 2019

விழி கொடுத்தால், ஒளியேற்றலாம்.

உடலுறுப்புத் தானங்களில் நாம் உயிரோடு இருக்கும் போதே எங்கள் சிறுநீரகம், எலும்பு மச்சை போன்றவற்றைத் தானம் செய்யம் முடியும். இதயம், நுரையீரல், கல்லீரல் போன்றவற்றை இரத்த ஓட்டம் நிகழ்ந்துகொண்டு உள்ள நிலையில்த் தான் தானமாகக் கொடுக்க முடியும். மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து உறுப்புத் தானம் பெறமுடியும். ஆனால் ஒருவர் இறந்த பின்பும் தானம் செய்யக் கூடிய ஒரு உறுப்பு உள்ளது. அது தான கண் என்ற பொன்னான உறுப்பு.


கண் தானம் செய்ய வயது வரம்பு கிடையாது. கண்ணாடி அணிபவர்கள் கூட கண் தானம் செய்யலாம். சர்க்கரை நோயாளிகளோ, இதய நோய், ரத்தக் கொதிப்பு நோயாளிகள், கண்புரை அறுவைசிகிச்சை செய்தோர் என்று அவர்களும் கண்தானம் செய்யலாம். இயற்கையாக மரணமெய்தியோர், மற்றும் விபத்தில் இறந்தவர்களிடமிருந்தும் கண்தானம் பெறலாம். வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்தாலும், அங்கு சென்று கண்தானம் பெற்றுக் கொள்வார்கள்.

அனால் HIV, மூளைக்கு காய்ச்சல், நாய்க்கடி நோய்க்காளானவர்களிடமிருந்து கண்தானம் பெறமாட்டார்கள். அத்துடன் போதைப் பொருள் பாவனையாளர், விஷத்தால் இறந்தவர், புற்றுநோயால்ப் பாதிக்கப்பட்டவரிடமிருந்தும் கண்தானம் பெறப்படமாட்டது. அதனாலேயே இறந்தவருக்கு முழு பரிசோதனை செய்து மருத்துவரிடம் முழுமையாக விசாரித்தே அந்தக் கண்ணை அறுவைசிகிச்சை செய்து எடுப்பார்கள். அதுவும் ஒருவர் இறந்து ஆறுமணிநேரத்துள் நடக்க வேண்டும்.
கண்தானம் செய்பவர் மரணமடைந்து ஆறு மணி நேரத்துள் கண் அகற்றப்பட்டு குளிரூட்டப்பட்ட சாதனத்துள் வைத்து கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு கண் வங்கியில் கண் பரிசோதனை செய்யப்பட்டு ஒன்று முதல் நான்கு வகையாகப் பிரித்து வைக்கப் படும்.

கன்மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, ஏற்கனவே வங்கியில்ப் பதிவு செய்து வைக்கப்பட்டவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அவசர நோயாளிகட்கும் முன்னுரிமை வழங்கப் படும். அவ்வாறு கண்ணறுவை சிகிச்சை செய்பவர்களுடைய கருவிழிகளில் ஆறு அடுக்குகள் காணப்படுகின்றது. ஒரு கருவிழியை, வெவ்வேறு பிரச்சினையால்ப் பாதிக்கப்பட்ட நால்வருக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் விஞ்ஞானம் இன்று விரிந்து வளர்ந்து காணப்படுகின்றது.
கண்மாற்று அறுவை சிகிச்சையின் பொது கருவிழி மட்டுமே கண்ணில் இருந்து எடுத்த நோயாளிக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உயிரோடு இருக்கும் ஒருவரிடமிருந்து ஒருபோதும் கண் தானம் எடுக்க முடியாது. நாம் கண்தானம் செய்ய விரும்பினால் உரிய படிவத்தை நிரப்பி கண் வங்கியில்க் கொடுக்க வேண்டும். அதன் நகலை நாம் எம்மோடு வைத்துக் கொள்ளவேண்டும். அத்தோடு நம் இரத்த உறவுகளிற்கு தெரிவித்திருக்க வேண்டும். திடீர் மரணம் நிகழ்ந்தால் உடனடியாக கண்வங்கிக்கு அறிவிக்கும்படி முன்பே, சொல்லி வைக்க வேண்டும். ஏன் என்றால் ஆறுமணித்தியாலத்துள் கருவிழி உடலை விட்டு பாதுகாப்பாக எடுக்க வேண்டும் என்பதால்.
உலகின் முதல் வெற்றிகரமான கண் அறுவை சிகிச்சை 1905இல் தான் நடைபெற்றது. ஆனால் இந்த உலகமே அறியாத வரலாற்று உண்மை உலகின் முதலாவது கண்தானம் செய்தது ஒரு தமிழன். அது வேறுயாருமில்லை, கண்ணப்ப நாயனார். யார் கண்ணப்ப நாயனார் என்று தெரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். தெரியாதவர்கள் முதியோர் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment